Friday, 20 December 2013

தலையில் கைவைத்து காத்திருக்கும் மனிதன்!

மாடு பிடித்து மேயவிட்டு  மனிதம் காக்கும்  சராசரி மனிதன் !

உலையில் சோறுவைத்து... தலையில் கைவைத்து 
காத்திருக்கும் மனிதன்!


சித்திரமாய் மாறிய சுவர்!


ஒட்டி உறவாடும் ஈஈஈஈ.........!?




ஆரஞ்சு  கலரு ரிப்பன்
1913 டூ 2013.
நூறு வருடம் கடந்த ரிப்பன் பில்டிங் !

உழைப்பை சுமந்து வறுமையை கடக்கும் மனிதர்!
 
 பூம்பூம் மாடு 
புல்லு திங்கும் மாடு 
வீடு வீடாய் 
தேடி போய் 
ஆசி வழங்கும் மாடு!

Tuesday, 16 July 2013

'சென்னை வெளி வட்ட சாலை'. படங்கள் இணைப்பு! (CHENNAI ORR PHOTOS)



            நாளுக்கு நாள் அதிரடி முகம் காட்டும் சென்னையின் மற்றுமொரு பிரமாண்ட  அடையாளமாய் வளர்ந்து வருகிறது 'சென்னை வெளி வட்ட சாலை' (ORR).   பறக்கும் ரயில், ராஜீவ் காந்தி சாலை, பழைய மாகாபலிபுரம் சாலை, மதுரவாயில் பைபாஸ், கிண்டி ரவுண்டானா,  மெட்ரோ ரயில் என்று சென்னையின் வளர்ச்சி  நம்மை வாய் பிளக்க வைக்கிறது.

சென்னையின் போக்குவரத்து  நெரிசலை குறைக்கும் வகையில்  சென்னை நகருக்கு வெளியே  துறைமுகத்தை இணைக்கும் பொருட்டு வண்டலூரிலிருந்து - மீஞ்சூர்வரை  ஆறு வழித்தடம் கொண்ட, சென்னை வெளிவட்ட சாலை அமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இதில்  முதல் கட்டமாக வண்டலூரிலிருந்து நெமிலிச்சேரி வரை சுமார் 30 கிமி சாலை அமைப்பட்டுவிட்டது. இச் சாலையின் இரண்டாம் கட்டப் பணி நெமிலிச்சேரியிலிருந்து தொடங்கி மீஞ்சூர் வரை நடக்கயிருக்கிறது.

இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால், சென்னைக்கு பல திசைகளிலிருந்து வந்து செல்லும் வாகனங்கள், சென்னை நகருக்கு  உள்ளே வராமல், ஆந்திரா, கோல்கட்டா போன்ற நகரங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.   வெளி மாவட்டங்களில் இருந்து, சென்னை வரும் கனரக வாகனங்கள், நகர் உள்ளே வராமல், குறிப்பிட்ட பகுதிகளுக்கு விரைவாக செல்ல, உள்வட்ட சாலையும், பை-பாஸ் சாலையும்  அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

படங்களை பெரிதுப் படுத்திப் பார்க்க படங்கள் மேல் கிளிக் செய்யவும்.



சர்வீஸ் சாலையில் பேருந்து நிறுத்தம்.
வழக்கமாகச்  செல்லும் வாகனங்களுக்கு வழிவிட்டு தனியே அமைந்திருப்பதை காணலாம்.

  • வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரை 62 கி.மீ., நீளத்திற்கு இச்சாலை தமிழக நெடுஞ்சாலைத் துறை கீழ் இயங்கும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மேற்பார்வையில், பெங்களூரைச் சேர்ந்த ஜி.எம்.ஆர். நிறுவனம், சென்னை வெளிவட்ட சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது அமைக்கப்படுகிறது.  
செய் நேர்த்தியில்,  இணையும் சாலைகள்


தொழிற்சாலைகளைக் கடந்து....
  • வடிவமைத்தல், கட்டுதல், நிதி திரட்டுதல், செயல்படுத்துதல், ஒப்படைத்தல் (டி.பி.எப்.ஒ.டி.,) திட்டத்தின் கீழ், சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்படுகிறது.



  • போக்குவரத்து தொடங்கிவிட்டது?
  • 6 பெரிய மேம்பாலங்கள், 5 பெரிய பாலங்கள், 100 சிறு பாலங்கள், பயணிகளுக்காக 21 கீழ்வழி சாலைகள், வாகனங்களுக்காக எட்டு கீழ்வழி சாலைகள் இந்த வெளிவட்ட சாலையில் இடம்பெறுகின்றன.
  • சர்வேதச தொழிற் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள சர்வீஸ் சாலை பேருந்து நிறுத்தம்.
தொழிற்சாலைகளைக் கடந்து....

மழை நீர் வடிகால்கள் ....


இணைப்புச் சாலைகளும் சர்வேதேச தரத்தில்!


மேகம் கருத்து


மழை வர பார்க்கிறது!
மாடுகளின்  மேய்ச்சல் நிலங்களின் ஊடே ஊர்ந்து செல்லும் ORR சாலை

இரவினில் ஒளிரும் வகையில்  மார்க் செய்யப்பட்டுள்ளது .

லாரி   டிரக்   ஓய்வெடுத்துச் செல்ல  டிரக் பே ....

  •  சாலையில், விபத்து ஏற்படாமல் இருக்க, சாலை முழுவதும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

  • கண்ணைக் கவரும் காட்சி?
  • இது  இரண்டுமே ஒரு பக்கத்து சாலைதான். சர்வீஸ் சாலைதான் இப்படி அழகாத் தெரிகிறது
சர்வேதேச தரத்தில் மின் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளது.
சாலைகளின் ஓரங்களை அசுத்தம் செய்யவேண்டாம். டாய்லெட்  தயார்
.
கண்ணைக் கவரும் சாலை?

வண்டலூர் 7 கீமீ



நேர்த்தியான பாலங்கள்.
மக்கள் பயன்பாட்டில்....

இனி...விலை  நிலங்கள்?
சர்வீஸ் சாலை......



  • வாலஜாபாத் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையை ஊடரத்துச் செல்லும் ORR.
  • சாலை அமைந்துள்ள 72 மீட்டர் அகல நிலத்தில், இருபுறமும் மூன்று வழிச் சாலை அமைப்பு போக, நடுவில் 22 மீட்டர் அகலம் கொண்ட நிலம், ரயில், மோனோ ரயில் அல்லது மெட்ரோ ரயில் போன்ற வருங்கால பொது போக்குவரத்து திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


  • ரூ.1,076 கோடியில் இரண்டாம் கட்ட பணி தேசிய நெடுஞ்சாலை எண். 205 நெமிலிச்சேரியிலிருந்து, திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரை, 32 கி.மீ., நீளத்திற்கு, இரண்டாம் கட்டமாக சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்படுகிறது.


 தூரத்தில் ஒரு கோயில். புத்த விகாரா  என்று தெரியவில்லை????.








இனி...விலை  நிலங்கள்?



உடனுக்குடன் சுத்தம் செய்யப் படுகிறது.


காஞ்சிபுரம் - பூந்தமல்லி சாலை ஊடாக.....


மழை வருமா....பனையின் மனம் குளிருமா....?










எழுத்தும் படமும் :     தோழன் மபா.
தகவல் உதவி :              யாஹூ தினமலர்.
மொபைல் காமிரா :      நோக்கியா N8.

Thursday, 11 July 2013

அழுகிய பழங்கள் விற்பனைக்கு?!

இங்கே கழுவி அங்கே விற்கிறார்கள்!


சென்னை பாரிசில் கண்ட காட்சி என்னை திடுக்கிட வைத்தது.

பூக்கடை காவல் நிலையம் அருகில் நிறைய சிறு சிறு பழ வியாபாரிகள் பழம் விற்றுக் கொண்டு இருப்பார்கள். நேற்று  அங்கே ஒரு பெண் நடை பாதையில் அமர்ந்து அட்டைபெட்டிகளில் பூஞ்சை படர்ந்திருந்த வீணாய்ப்போன அழுகிய திராட்சை (பெரியசைஸ்) பழங்களை எடுத்து சிறு கத்தரிக்கோலைக் கொண்டு வெட்டி அதை கழுவிக்கொண்டு இருந்தாள். 

அப்படி கழுவிய பழங்களை அழகாக அடுக்கி விற்பனை செய்துக் கொண்டு இருந்தான் ஒருவன் (படம் அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது).  . பார்க்கும்போதே பகீர் என்று இருந்தது.

இதை  எப்படியாவது போட்டோ எடுக்வேண்டுமே?

மீண்டும் வந்த வழியிலேயே வந்து மொபைல் காமிராவை சரியான ஆங்கிளில் வைத்து நடந்துகொண்டே எடுத்தேன். படம் நன்றாகவே வந்திருக்கிறது.  

 
அடுத்தமுறை பாரிசில் பழம் வாங்கும்போது பார்த்து வாங்கவும்.

Monday, 17 June 2013

கண்டதும் சுட்டதும் !

திருவாலங்காட்டில் உள்ள ஆஞ்சிநேயர் சிலை கும்பாபிஷேக ஆர்ச்.
மயிலாடுதுறை டூ கும்பகோணம் சாலையில் திருவாலங்காட்டில் உள்ள ஆஞ்சிநேயர் சிலை.
 சென்னை ஆர் ஏ  புறத்தில் கடற்கரையோர பில்டிங்.
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு சர்ச்
சென்னை அம்பத்தூரில் உள்ள எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கார்பெரெட் ஆபீஸ்.
சென்னையில் உள்ள மியுசிக் அகாடமி. டிசம்பர் சீசனில் கார் நிறுத்த இடம் இருக்காது.