![]() |
| இங்கே கழுவி அங்கே விற்கிறார்கள்! |
சென்னை பாரிசில் கண்ட காட்சி என்னை திடுக்கிட வைத்தது.
பூக்கடை காவல் நிலையம் அருகில் நிறைய சிறு சிறு பழ வியாபாரிகள் பழம் விற்றுக் கொண்டு இருப்பார்கள். நேற்று அங்கே ஒரு பெண் நடை பாதையில் அமர்ந்து அட்டைபெட்டிகளில் பூஞ்சை படர்ந்திருந்த வீணாய்ப்போன அழுகிய திராட்சை (பெரியசைஸ்) பழங்களை எடுத்து சிறு கத்தரிக்கோலைக் கொண்டு வெட்டி அதை கழுவிக்கொண்டு இருந்தாள்.
அப்படி கழுவிய பழங்களை அழகாக அடுக்கி விற்பனை செய்துக் கொண்டு இருந்தான் ஒருவன் (படம் அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது). . பார்க்கும்போதே பகீர் என்று இருந்தது.
இதை எப்படியாவது போட்டோ எடுக்வேண்டுமே?
மீண்டும் வந்த வழியிலேயே வந்து மொபைல் காமிராவை சரியான ஆங்கிளில் வைத்து நடந்துகொண்டே எடுத்தேன். படம் நன்றாகவே வந்திருக்கிறது.
அடுத்தமுறை பாரிசில் பழம் வாங்கும்போது பார்த்து வாங்கவும்.

No comments:
Post a Comment