Monday, 17 June 2013

ஸ்மைல் பிளிஸ்


எனது மகள் ரக்ஷிதா

வணக்கம் நண்பர்களே!

              எழுதுவதில் எப்படி ஆர்வமோ அப்படி ஒரு ஆர்வம் புகைப் படம் எடுப்பதிலும்.  எனது காலத்தில் எனது பார்வையில் பட்டதை பதிய  வேண்டும் என்பதில் அடங்காத ஆசை உண்டு.  காலத்தை பதிவு செய்வதில் தமிழன் என்றுமே பின்னோக்கியே இருக்கிறான். இதற்கு நேர்மாறானவர்கள் ஐரோப்பியர்கள். தங்கள் கண்ணில் பட்டதை எல்லாவற்றையும் பதிவு செய்தார்கள். அதனால் அவர்களும் அவர்களது ஆங்கிலமும்  இன்றும் உலகை ஆள்கின்றன. 

கையில் காமிரா கிடைக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு புகைப்படக் கலைஞன் கண் சிமிட்டத் தொடங்கி விடுவான். கலை நயம் மிக்க புகைப்படம் எடுத்ததில்லை என்றாலும் அந்த காட்சியை பதிவு செய்யவேண்டும் என்பதற்காகவே புகைப்படம் எடுப்பேன். 

முன்பு Htc  காமிரா மொபைல் இருந்தது, இப்போது என் நண்பன் முகமது அலி வாங்கித்தந்த   நோக்கியா  N8  காமிரா மொபைல் இருக்கிறது. அதில்தான் அதிக அளவில் புகைப்படம் எடுக்கிறேன். 12 மெகா பிகசல் காமிராவும் Carl  Zeisis Tessar 2.8/28 லென்சும் கொண்டது. அதனாலேயே நல்ல ஒரு காமிராவுக்கு சாவல் விடும் ஆற்றல்  இந்த  நோக்கியா  N 8 க்கு உள்ளது. 

இனி நான் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு அவ்வப்போது....

நன்றி!  


No comments:

Post a Comment